வடக்கு கொலம்பியாவின் ஆன்டிகுவியாவில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இதில் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது பேருந்து டோலுவிலிருந்து மெடலின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்தவர்கள் அந்தியோக்கியாவைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பயணம் அதிகாரப்பூர்வ பள்ளிச் சுற்றுலா அல்ல என்றும், மாணவர்களே இதை ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது.

