திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் பெரிய மிளகுபாறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகச் செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியமங்கலத்தில் ஒரு கைது: இதேபோல், அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் தெற்கு உக்கடை பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்த அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (19) என்பவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

