தஞ்சை மாவட்டம், கோவிலடியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்றது. இங்கிருந்து மணல் மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாட்டு வண்டிகளை மறித்து பரிசோதனை செய்த பொழுது லால்குடி பூவாளூர் ரோடு சாந்தி நகர் லட்சுமணன் மகன் தங்கமணி (36), சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு பேச்சிமுத்து மகன் லோகநாதன் (45) மற்றும் அன்பில் மிசின் தெருவை சேர்ந்த அங்கு அரசன் மகன் விஜய் (22) ஆகியோர் அரசு அனுமதியின்றி மணல் மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மூன்று மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து தோகூர் ஸ்டேஷன் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.