ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகர் அருகே மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர், சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு எல்லைப்பகுதியில் ராணுவம் கூடுதல் பாதுகாப்புடன் இருந்து வந்தது. அத்துடன் காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ எனும் பெயரில் தீவிரவாதிகள் தேடுதல் வகை நடைபெற்று வந்தது. ராணுவம், துணை ராணுவம், காஷ்மீர் போலீசார் இணைந்து இந்த தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.
இன் நிலையில் காஷ்மீரில் பதுங்கி இருந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்த தேடத்தில் வேட்டையின் போது 3 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், அவர்களை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளுக்கும் பகல்ஹாம் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.