Skip to content

5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு முக்கியத் துறைகளின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு:

இன்னசென்ட் திவ்யா IAS: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விசாகன் IAS: தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்துராஜ் IAS: டாஸ்மாக் (TASMAC) மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்க உள்ளார்.

ரத்னா IAS: ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக இருந்த இவர், தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உமா IAS: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளராக இருந்த இவர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக ரீதியிலான இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!