அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. 50 % வரி விதிப்பு வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
“சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்தியாவின் இறக்குமதிகள், சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டு, 140 கோடி இந்திய மக்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்பது உட்பட, இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.