Skip to content

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை செய்து வந்த நிலையில் விடுதிக்கு எதிரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்து உள்ளனர்.

13-09-2018 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் தங்கி இருந்த 11 வயது சிறுமியை தனது வீட்டிற்கு வேலை செய்ய வெங்கடேசன் அழைத்து சென்று படுக்கை அறையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.  அந்த விவகாரத்தை வெளியில்

சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளான் அதன் பின்னர் அதே போன்று 17-12-2018 அன்று அதே விடுதியில் உள்ள மேலும் 5 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்த நிலையில் அதன் விவகாரம் குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அப்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அதன் வழக்கு இன்று தீர்பிற்கு வந்த நிலையில் 6 பெண் பிள்ளைகளின் வாழ்கையை சீரழித்த காரணத்திற்காக காம கொடுரனுக்கு 35 வருடம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று ஆலங்காயம் படகுப்பம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (29) என்ற காம கொடூரன் அதே பகுதியில் உள்ள பெட்டிகடையில் 03-05-2018 அன்று எண்ணெய் வாங்க சென்ற நிலையில் கடைக்காரரின் வீட்டில் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமியை அவரது தாய் இல்லாத போது பாலியல் சீண்டல் செய்த நிலையில் அவனுக்கு 9 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு காம கொடூரன்களுக்கு சிறை தண்டனை தீர்ப்பு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!