Skip to content

7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

இஸ்ரேல் மீது,  பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன், 200 பேரை கடத்திச்சென்றது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.  இதற்கிடையே பணய கைதிகளை விடுவிப்பதற்காக  7 நாட்கள் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருந்தது. ஆனாலும் முழுவதுமாக பணய கைதிகள்   விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று   மீண்டும்   இஸ்ரேல் போர் தொடங்கியது.   பாலஸ்தீனத்தின்  ரபா நகரை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  ஆனாலும் கத்தார் நாடு மூலம்  போர் நிறுத்த முயற்சிகளும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!