Skip to content

77-வது சுதந்திர தினம்… கரூரில் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை…..

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மூவர்ண தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை

கண்காணிப்பாளர் கலந்துகொண்டு சமாதான புறா,மூவர்ண பலூனை பறக்க விட்டனர். சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கியதை,தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் 34 பயணாளிக்கு 92 லட்சத்து 98 ஆயிரத்து 820 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!