கஞ்சா விற்றவர் கைது…
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் பெயரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர் .அப்போது கீழப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை கீழ புதூர் பகுதியை சேர்ந்த விஜய் பாபு (27) கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது
திருச்சி பாலக்கரை திருச்சி காவேரி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( 29 ). ஐடிஐ முடித்துள்ளவர். இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை வழிமறித்த வழிமறித்த பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்த மகேந்திரன் (25) என்பவர்செல்போனை பற்றி சென்றார் .இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் பொருட்களை விற்ற பெண் உள்பட 9 பேர் கைது
திருச்சி அக் 17-திருச்சி உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உய்யக் கொண்டான் திருமலை ஆனந்தி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த கலையரசி (வயது 45 )என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று உறையூர் பாண்டமங்கலம் பொது கழிவறை அருகில் புகையிலைபொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஸ்டீபன் ராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி கே கே நகர் பகுதியில் மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த கருமண்டபம் பகுதியை சார்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவரை கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கைது செய்து அவரிடம் இருந்து 850 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார் இதேபோன்று ஏர்போர்ட் பகுதியில் புகையிலை பொருட்களை விற்றுக் கொண்டிருந்த சலீம் (வயது 29) என்பவரை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளார். இதே போன்று கோட்டை போலீஸ் உட்பட்ட கரூர் பைபாஸ் சாலையில் புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த திருப்பதி (வயது 55) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கண்ட 9 பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோன்று பாலக்கரை தில்லைநகர் உறையூர் பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்றதாக சந்தானம் வயது 72நபிஷா ( 60) முஹம்மது ஆரிப் (40) சாந்தி (வயது 43) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மேற்கண்ட அனைவரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.