Skip to content

90“ பாடல்கள் தற்போது ஹிட்…ரீமிக்ஸ் தவறில்லை-இசையமைப்பாளர் தேவா

கரூர், கோடங்கிபட்டி பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி (Live Concert) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா கரூரில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா பங்கேற்று டிக்கெட்டை வெளியிட்டார். மேலும், திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இசையமைப்பாளர் தேவா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. “பெண் சிங்கம்” என்ற படத்திற்காக ஒரு மாதம் அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. காலை 5 மணிக்கு வரச் சொல்லி என்னை அழைப்பார். தற்போதைய முதல்வர்

மு.க.ஸ்டாலினும் அப்போது எங்களுடன் இருந்திருக்கிறார். கலைஞர் ஒரு பாடல் கூட எழுதி இருக்கிறார். அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. அது என் பாக்கியம். குறிப்பாக “வித

விதமா சோப்பு சீப்பு கண்ணாடி” பாட்டு கருணாநிதிக்கு ரொம்ப பிடிக்கும் என்று பாடி காண்பித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தேவா,

மூன்று புதிய படங்களுக்கு இசையமைக்கிறேன் டிசம்பரில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது அந்த படத்தில் கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து இசையமைத்துள்ளேன் அந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது என்பது தவறில்லை ஜெனரேஷன் கேப் தான் இது. எனக்கு எம்.எஸ்.வி-ஐ பிடிக்கும். என் பையனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பிடிக்கும். என் பேரனுக்கு அனிருத்தை பிடிக்கும். அதற்காக இப்போது இருப்பவர்கள் நன்றாக இசையமைக்கவில்லை என்று சொல்ல முடியாது.

கரூரில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் தேவா, அனுராதா ,ஸ்ரீராம், மனோ சரண் உள்ளிட்ட பாடகர்கள் பாட இருக்கின்றனர்.

காப்பரிமை நான் கேட்பதில்லை. 90-களில் இசையமைத்த பாடல் எல்லாம் இப்போது ஹிட் அடிக்கிறது. குறிப்பாக சமீபத்தில் விஜய் படத்தில் இடம் பெற்ற “கரு கரு கருப்பாயி” பாடல் சிறுவர்களுக்கும் பிடித்துள்ளது. எனக்கு அதில் பெருமை தான் கிடைக்கிறது. அதனால் நான் காப்புரிமை கேட்பதில்லை என்றார்.

error: Content is protected !!