கரூர் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைக்கடைகள் அகற்றம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் பகுதியில், 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 174 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அந்தப் பகுதியில் கடை வைத்திருந்தவர்கள் சாலையோரத்தில் தலைக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளாக தாமதமாக பணிகள் நடைபெற்று வருவதால் தரைக் கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வரி நிலுவை வைத்திருந்த பல்வேறு கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில் அந்த கடைகளுக்கு முன்பாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தரைக் கடைகளை மாநகராட்சி ஆணையர் சுதா உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றினர்.
புதியதாக கட்டப்பட்டு வரும் காமராஜர் மார்க்கெட் கடைகள் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் தரைக்கடைகள் வைக்க வழியில்லாததால் வெளியில் கடை வைத்துள்ளதாக கூறினர்.