Skip to content

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் 40 நாட்கள் நோன்பு இருந்து, மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். இந்த  நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். அதன் தொடக்க  தினத்தை  சாம்பல் புதன் என அனுசரிக்கிறார்கள்.  இன்று சாம்பல் புதனுடன்  தவக்காலம் தொடங்கியது.

இதையொட்டி  வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், தஞ்சை மாவட்டம் பூண்டி  புதுமை மாதா பசிலிக்கா உள்ளிட்ட அனைத்து   தேவாலயங்களிலும்  இன்று காலை  சிறப்பு  திருப்பலிகள் நடந்தது.   பூண்டி புதுமை  மாதா பசிலிக்காவில்  ஆலய அதிபர்  அருட்தந்தை   பி. ஜே சாம்சன் திருப்பலி நடத்தி, பக்தர்களுக்கு திருநீறு இட்டு  ஆசி வழங்கினார்.  இதுபோல அனைத்து  தேவாலயங்களிலும் பாதிரியார்கள் இயேசுவின் சிலுவைப்பாடுகள் குறித்து  போதித்து  நிறைவாக பக்தர்களுக்கு  நெற்றியில் திருநீறு பூசி  ஆசி வழங்கினர்.

இன்று முதல்  40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு கடை பிடிக்கிறார்கள்.  வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து 7வது வெள்ளியை  புனித வெள்ளியாக( ஏப்ரல் 18) கடைபிடிக்கிறார்கள்   ஏப்ரல் 20ம் தேதி  ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றையை தினம் நோன்பை   நிறைவு செய்வார்கள்.

 

 

error: Content is protected !!