Skip to content

திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற  அவசரக் கூட்டம்   இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி ,விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் நகர் மன்ற   அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,புத்தூர் ஈ.வி.ஆர். சாலை பகுதியில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் மரகதம் ,பூரணி ,தரணி ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து  கொடுத்துள்ளனர்.

சிலை அமைத்தல் பராமரித்தலுக்கான முழு செலவையும் சிலை அமைக்க கோரும் மேயர் அன்பழகனே ஏற்றுக்கொள்ள வேண்டும். வெண்கலத்திலான சிலையை மட்டுமே அமைக்க வேண்டும் அதன் பின்னர் கலெக்டர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை அனுமதியுடன் சில சிலை அமைப்பதற்கு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என தீர்மானம் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த

தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ் நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது, முதலமைச்சர் மு
.க .ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி திறந்து வைக்க உள்ள பஞ்சப்பூர். பஸ் நிலையத்தில் அனைத்து கவுன்சிலர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
காங்கிரஸ் கவுன்சிலர்வக்கீல் கோவிந்தராஜன் பேசும்போது…
விரைவாக சிவாஜி சிலையை அமைத்து முதல்வர் வருகிற 9-ந் தேதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிமுக கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் ந.பிரபாகரன், திமுக கவுன்சிலர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் நன்றி தெரிவித்து பேசினர். ஏற்கனவே
பாலக்கரை ரவுண்டானா பகுதியில் 2009 -ல் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது பின்னர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக சிலையை திறக்காமல் மூடப்பட்டு கிடந்தது.
பின்னர் மாநகராட்சி நிர்வாகம் அந்த சிலையினை இடமாற்றம் செய்து சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள ரவுண்டானாவில் சில தினங்களுக்கு முன்பு சிவாஜி சிலையினை நிறுவினர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த சிலை எதிர்ப்பின் காரணமாக அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு  புத்தூருக்கு தனிநபரின் இடத்தில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகில் தானமாக தனியாரிடம் பெறப்பட்ட இடத்தில் சிலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.சிலை அமைக்கும் பணிகள் நாளை மாலைக்குள் முடிவடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சிலையை திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து திட்டமிட்டபடி வைக்க உள்ளார் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

 

error: Content is protected !!