தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் மதுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் இணை இயக்குநர் பெர்மி வித்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கரநாராயணன், சீட்ஸ் தொண்டு நிறுவனர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருட்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
