Skip to content

கோவையில் தேசிய அளவிலான போட்டி..மாணவ-மாணவிகள் பங்கேற்பு

கோவையை அடுத்த தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் யோகா,சிலம்பம்,கராத்தே,ஓவியம்,உள்ளிட்ட பத்து வகையான போட்டிகள் நடைபெற்றன. யோவா யோகா அகாடமி உட்பட பல்வேறு விளையாட்டு அமைப்பினர் இணைந்த ஓபன் பிரிவாக நடைபெற்ற இதில் கேரளா,கர்நாடகா,பீகார்,மத்தியபிரதேசம்,மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை பிரபல யூ டியூபர் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகாவை உலகமெங்கும் கொண்டு சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும், மேலும், பிசியோதெரபி மருத்துவப் படிப்பில் யோகாவை ஒரு பாடத்திட்டமாக அவர் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.. யோகாசனம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் அனைவரும் வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என தெரிவித்தார்.. நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்தது புதிய அனுபவத்தை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
error: Content is protected !!