Skip to content

ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழா-பழனியாண்டி பேசும்போது சலசலப்பு

தமிழ்நாட்டில்  ஸ்ரீரங்கம் , சாமல்பட்டி, சிதம்பரம்,  திருவண்ணாமலை,  மன்னார்குடி,  விருத்தாசலம், போளூர், பரங்கிமலை ,   குழித்துறை ஆகிய  நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட ரயில் நிலையங்களில்  கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இதுபோல இந்தியா முழுவதும் 103 ரயில் நிலையங்களில் இந்த சீரமைப்பு பணி நடந்துள்ளது.

இதனை பிரதமர் மோடி  இன்று  காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.  அந்தந்த ரயில் நிலையங்களிலும் இதற்கான விழா நடந்தது.

ஸ்ரீரங்கத்தில் நடந்த  விழாவில்   துரை வைகோ எம்.பி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், , ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, மற்றும்  அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொகுதி எம்.எல்.ஏவான  பழனியாண்டி விழாவில் பேசினார்.  அப்போது  கூட்டத்தில் இருந்த  பாஜகவை சேர்ந்த ஒருவர் , விழாவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவியுங்கள் என்றார்.  இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர்  அவரை  போலீசாரும்,  மற்றவர்களும் உட்காரும்படி கூறினர். இதனால் அவர் உட்கார்ந்து கொண்டார். அதன் பின்னர்  விழா நடந்தது.

 

error: Content is protected !!