Skip to content

திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று ஆதீனத்துக்குட்பட்ட துவக்கப்பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

ஆதீன குரு மகா சன்னிதானம் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து பள்ளி கட்டிடத்தில் விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆதீனம் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பொது மருத்துவம் மகளிர் மருத்துவம் பல் மருத்துவம் கண் சிகிச்சை முகாம், தோல் நோய் மருத்துவம் ஆகியவற்றின் கீழ் சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்,

பொதுமக்களுக்கு தேவையான  மருந்துகள் விலை இன்றி வழங்கப்பட்டன.ஆதீன பக்தர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் பங்கேற்று ரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு ஆதின மடாதிபதி சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!