கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எம்எல்ஏ V. செந்தில்பாலாஜி கூறியதாவது.. கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தி.மு.க உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரச்சார பொதுக்கூட்டம், 02.07.2025 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில், கரூர் உழவர் சந்தை அருகில், தலைமை கழக பேச்சாளர் திரு. ஆரூர் மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்ற நடைபெற உள்ளது..
அதுசமயம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர – பகுதி – ஒன்றிய – பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட – கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.