பிரதமர் மோடி 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று அவர், கானா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த நாட்டின் ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், இன்றும், நாளையும் அவர் கானா நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ஜூலை 3-4 தேதிகளில், டிரினிடாட் & டொபாகோ குடியரசு செல்லும் பிரதமர் மோடி, போர்ட் ஆஃப் ஸ்பெயினிலிருந்து, பியூனஸ் அயர்ஸுக்குப் பயணம் மேற்கொள்கிறார். 57 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் அர்ஜென்டினாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து நாடுகளுக்கான எனது பயணம், உலகளாவிய தெற்கு முழுவதும் நமது பிணைப்புகளை வலுப்படுத்தும், அட்லாண்டிக்கின் இருபுறமும் நமது கூட்டாண்மைகளை வலுப்படுத்தும், மேலும் பிரிக்ஸ், ஆப்பிரிக்க ஒன்றியம், ஈகோவாஸ் மற்றும் கேரிகாம் போன்ற பலதரப்பு தளங்களில் ஈடுபாடுகளை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் கூறியுள்ளார்.