தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் தலைமை கழக பேச்சாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை
செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட- கிளைக் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.