தமிழ்நாட்டின் மீது பாஜக தொடுக்கின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதவும், அவர்களது எதேச்சதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்த ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையை முன்னெடுக்கிறோம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவனூர் ஊராட்சியில் ஒரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையில், இன்று திமுக மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தனது பெயரை பதிவு செய்து உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்நாட்டில் மண், மானம் காப்பதற்கு இந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களை ஓரணியில் திரட்டி தமிழ்நாட்டின் மீது பாஜக தொடுக்கின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதவும், அவர்களது
எதேச்சதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்த ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையை முன்னெடுக்கிறோம் என்றார் .
மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பூத்திலும் இருக்கின்ற பொதுமக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளையும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதை எடுத்துக் கூறி தமிழ்நாட்டு மக்களை இந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற இந்த பரப்புரையின் மூலமாக இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்ற கழக ஐ.டி விங் சார்பாக ஒவ்வொரு மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலமாக ஒவ்வொரு பூத்துகளில் இருக்கின்ற BDA கள், BL2 இணைந்து அந்த பூத்தில் இருக்கின்ற கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, ஐடி விங் நிர்வாகிகளை கொண்டு மாவட்டம் முழுவதும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும். ஆகஸ்ட் மாத இறுதி வரை நடைபெறுகின்ற இந்த பணி மூலமாக மிகப்பெரிய அளவில் மக்களை பொதுமக்களை ஒன்று திரட்டி தமிழக முதல்வர் தலைமையில் இந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை வெற்றி பெறுவதற்கான பணிகளை முழுமூச்சோடு செய்ய இருக்கின்றோம் என தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாட்டின் மண், மானம், மொழியைக் காக்க எனும் உறுதிமொழியை மக்களுடன் இணைந்து, போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்றுக்கொண்டனர்.