திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் அப்துல் காதர்.இவர் அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கீழப்புலி வார்டு ரோடு பகுதியில் 3 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அவர்களைப் பிடித்து வழக்கு போடுவதாக கூறிவிட்டு மூன்று பேரில் ஒருவரை மட்டும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அண்ணாசிலை பகுதிக்கு வந்தார்.அப்போது வழக்கு போட்டால் நிறைய செலவாகும் என்று கூறி அவரிடம் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு அந்த நபரை அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்தச் சம்பவம் குறித்து திருச்சி கோட்டை போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இந்த புகாரை மாநகர போலீஸ் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதை விசாரித்த போலீஸ் கமிஷனர் காமினி உடனடியாக காவலர் அப்துல் காதரை பணியிடைமிக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.இந்தச் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.