அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV (GROUP IV) தேர்வு நடைபெறும் மாதிரிப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (12.07.2025) நேரில் பார்வையிட்டு தெரிவித்ததாவது,
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP IV) தேர்வு 12.07.2025 இன்று சனிக்கிழமை முற்பகல் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை அரியலூரில் 22 தேர்வு கூடங்கள், உடையார்பாளையத்தில் 19 தேர்வு கூடங்கள், செந்துறை 10 தேர்வு கூடங்கள் மற்றும் ஆண்டிமடம் 06 தேர்வு கூடங்களிலும் மொத்தம் 57 தேர்வு கூடங்களில் நடைபெற்றது. 16,534 தேர்வாளர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவற்றில் இன்று தேர்வுக்கு வருகை புரிந்தவர்கள் 13960, தேர்வு எழுத வருகை புரியாதவர்கள் 2574 நபர்கள், மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்;களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள், 16 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர்/ உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 57 ஆய்வு அலுவலர்கள், 60 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி; செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தேர்வு கூடத்திற்கும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
