சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் பல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஜூன் 25-ம் தேதி 4 விண்வெளி வீர்களை விண்ணுக்கு அனுப்பியது.
சுபன்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்) , போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். . அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட விண்கலம், 28 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 26-ம் தேதி மாலை சென்றடைந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இந்தக் குழுவினர் தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு, டிராகன் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி நேற்றுமாலை 4.45மணிக்க பூமியை நோக்கிப் புறப்பட்டனர். இந்த விண்கலம் இன்று பிற்பகல் சரியாக 3 மணி அளவில் அமெரிக்காவில் கலிபோர்னிா மாநிலம் சாண்டியாகோ கடலில் பிளாஷ் டவுன் (பத்திரமாக இறங்கியது) ஆனது கடலில் இருந்து 4 வீரர்களும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சுமார் 22 மணி நேர பயணத்துக்கு பின் 4 வீரர்களும் பூமிக்கு திரும்பினர். அப்போது அமெரிக்காவில் அதிகாலை 5.30 மணி. 18 நாட்கள் தங்கியிருந்த 4 வீரர்களும் 31 நாடுகளின் 60க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
4 வீரர்களும் ஒருவாரம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியும்.
மகன் வெற்றியுடன் திரும்பியதை அறிந்த சுபான்ஷுவின் பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடினர். 4 வீரர்களும் திரும்புவதை பார்க்க சாண்டியாகோ கடற்கரையில் மக்கள் திரண்டிருந்தனர். வீரர்கள் திரும்பியதும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.