Skip to content

பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

 பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது.  பீகாரில்  எந்தவித வளர்ச்சிப்பணிகள் இல்லாவிட்டாலும் வன்முறை தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான்  நேற்று மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆயுள் கைதியை சரமாரி சுட்டுக்கொன்று விட்டு தப்பியது.

பீகார் தலைநகர் பாட்னா, இங்குள்ள ஸ்  மருத்துவமனைக்குள்   இன்று  பட்டப்பகலில் நுழைந்த கும்பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  குற்றவாளி ஒருவரை சுட்டுக்கொன்றது.  கொலை செய்யப்பட்டவர் யெர் சந்தன் மிஸ்ரா.  இவர் மீது 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மட்டும் உள்ளது.  மற்ற வழக்குகள் தனி. இதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இந்த மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார் சந்தன் மிஸ்ரா.

 5 பேர் கொண்ட கும்பல்  திபுதிபுவென  மருத்துவமனைக்குள் நுழைந்தது. அவர்கள் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே வந்து சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெற்று வந்த அறைக்குச் சென்று சரமாரியாக  சுட்டு கொன்றுவிட்டு,  கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
 இது குறித்து  பாட்னா மூத்த போலீஸ் அதிகாரி கார்திகே சர்மா கூறுகையில், ”12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் சிறையில் இருந்து பாகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

அவர் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் வந்து பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அவரை எதிர்க்கோஷ்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தன் ஷெரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த கொலையில்  ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கொலையில் மருத்துவமனை செக்யூரிட்டி கார்டுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இது குறித்து  பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ”மாநிலத்தில் யாராவது பாதுகாப்பாக இருக்கிறார்களா?. அரசு ஆதரவு பெற்ற கிரிமினல்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்த நோயாளியை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது போன்று சம்பவம் 2005ம் ஆண்டுக்கு முன்பு நடந்ததா?” என்று கேள்வி எழுப்பினார். மாநில டிஜிபி வினய் குமார் இது குறித்து கூறுகையில், ”குற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டை ஒப்பிடுகையில் மாநிலத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!