Skip to content

முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை பாட பிரிவில் சேர்ப்பதற்கு தடை விதித்து நிர்வாகம் உத்தரவிடப்பட்டது.. இதனை தொடர்ந்து உருமு தனலட்சுமி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுவரொட்டிகள் ஒட்டியதால் இன்று காலை திடீரென்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ..

இதை அறியாத மாணவர்கள் கல்லூரிக்கு வந்து பார்த்த பொழுது கல்லூரி காவலாளிகள் கல்லூரி விடுமுறை என கூறியதால் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இணைந்து கல்லூரி வாயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி துவாக்குடி அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

error: Content is protected !!