கோவை, பொள்ளாச்சி நீர்வளத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமிகவுண்டர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி மகாலிங்கம், ஆகியோர்களுக்கு திருவுருவச் சிலையுடன் நினைவு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது
இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அமைச்சர் ஏ வா வேலு நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகளின் உயிர்நாடியாக
விளங்கக்கூடிய மிகப்பெரிய பாசன திட்டங்களில் ஒன்றான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உருவாக்கப்பட்டபோது பொறுப்பில் இருந்த தலைவர்களின் திருவுருவசிலைகள் வைக்கும் பணி இறுதிக்கடத்தை எட்டி உள்ளதாகவும் வரும் 23ம் தேதி தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படும் என்றும் இதில் கீழ்தளம் விவசாயிகளின் கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மேல் தளத்தில் பாசன திட்டம் குறித்து இளைய சமுதாயத்தினர் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு 4.28 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி. மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா பத்மநாபன் நகர மன்ற தலைவர் சியாமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.