Skip to content

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை  அவ்வப்போது அதிகளவில் உயர்வதும், கணிசமாக குறைவதுமாக இருந்தாலும்ம் தங்கத்திற்கான மவுசு அதிகமாக இருப்பதாகவே இருந்து வருகிறது. தங்கத்தை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதோடு,  தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான மற்றும்  சிறந்த சேமிப்பாகவும் கருதுகின்றனர். அந்தவகையில் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும், அவ்வப்போது குறைந்தும்  வருகிறது.

கடந்த வாரம்  தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, சனிக்கிழமை(ஜூலை 19) அன்று  சவரன் ரூ.73,360க்கும்  ஒரு கிராம் ரூ.9,170க்கும் விற்பனையானது. தொடர்ந்து  வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் (ஜூலை 21)   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 73,440க்கும்,  கிராம்  ரூ.9,180க்கும் விற்பனையானது. பின்னர் நேற்று  (ஜூலை 22) தங்கம் விலை ஒரே அடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து , சவரன் மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.  அதன்படி ஒரு சவரன் ரூ74,280க்கும், கிராம் ரூ.9,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 23) சென்னையில் இன்று தங்கம் விலை 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து  ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  ஆபரணத்தங்கம் கிராமுக்கு   ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரன் ரூ.75,040க்கும் விற்பனையானது.  இதேபோல் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  சில்லறை வர்த்தகத்தில்  வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து  ஒரு கிராம் வெள்ளி ரூ.129க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!