Skip to content

மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின்  இன்று அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று, உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று (புதன்) தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்  வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அப்போது முகாமிற்கு வந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அவர் பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினை  அவருடைய அண்ணன்  மு.க. அழகிரி சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.

error: Content is protected !!