Skip to content

பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

 

பெரம்பலூர் மாவட்டம்   குன்னத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவரது மகன்  சஞ்சய்(24). இவர் குன்னத்தில்   பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்காக  இவர்   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில்  இருந்து  பட்டாசுகளை வாங்கி அவற்றை  பைகளில் வைத்து  பைக்கில் தொங்கவிட்டபடி  குன்னம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  நேரம் ஆக ஆக  பைக்கில்  சைலன்சர்  சூடேறி அது பட்டாசுக்கும் பரவியது.

இன்று காலை 7 மணி அளவில், கடலூர் மாவட்டம் வேப்பூர் யூனியன் ஆபீஸ் அருகே வரும்போது,  பட்டாசு வெடித்து சிதறியது. இதில் பல பட்டாசுகள்  சஞ்சய்மீதும் பட்டது.  இதனால் நிலைகுலைந்த சஞ்சய் கீழே சாய்ந்தார். அப்போது அந்த வழியாக  வேப்பூர் செல்வகுமார் மகன் சீனிஷ்(12) என்ற மாணவன் வந்து கொண்டிருந்தான். பட்டாசு  வெடி சிதறல்கள் அந்த மாணவன் மீதும் பட்டது. இதில் மாணவனும்,  பட்டாசு வாங்கி வந்த சஞ்சயும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு  பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  சஞ்சய் ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது உடலில் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக  கூறப்படுகிறது.  மாணவன்  40 சதவீத காயங்களுடன்  தீவிர சிகிச்சை பிரிவின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

[

error: Content is protected !!