Skip to content

ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து  பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து  கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது  அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை. அவர் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை என்பதால்,  டிரம்பின் கோபம் இப்போது இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.
அதன் வெளிப்பாடு தான், ஜூலை 30 அன்று,  இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார் டிரம்ப். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று கூறிய டிரம்ப் பின்னர் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தள்ளிவைத்து  இருப்பதாக கூறினார்.

 

error: Content is protected !!