கடந்த 2022-ம் ஆண்டு காணாமல் போன 47 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் காணாமல் போனதாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகம் முன்பு நகை காளி பெட்டிகளை கொட்டி நூதன முறையில் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் மேதி நகர் பகுதியை சார்ந்த சுமதி கடந்த 2022 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது வெளியே சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் சென்று பூட்டை உடைத்து 47 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்து மூன்றாண்டுகள் ஆகியும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனவும், அப்போதைய எஸ்ஐ மற்றும் காவல் ஆய்வாளர் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வந்ததாகவும், தற்போது வரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கு கூறி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் அவர் வீட்டில் திருட்டுப் போன நகை காலி பெட்டிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி புகார் மனு அளிக்க உள்ளே அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.