தஞ்சாவூர், கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை செல்வநாதன் (38) என்ற நபர் கண்டித்த போது, இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சந்தோஷ் மற்றும் அவரது நண்பன் அமரேஷ் இணைந்து செல்வநாதனை வெட்டிப் படுகொலை செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தஞ்சை நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு
- by Authour
