Skip to content

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில்  டிரம்ப்  நேற்று கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. 50 % வரி விதிப்பு வரும்  27ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

 50 சதவீத வரி உயர்வு குறித்து  அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கும்  செயல்,  ரஷியாவின்  தீய  செயல்களுக்கு இடையூறாக உள்ளது.  அந்த கச்சா  எண்ணெயை இந்தியா வெளிமார்க்கெட்டில்  விற்கிறது. இதன் மூலம் ரஷியாவின் ஆக்ரமிப்புக்கு  நிதி உதவி அளிக்கிறது.
 ரஷியாவிடம் மற்ற நாடுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கச்சா எண்ணெய்  வாங்குகிறதா என்பதை கண்டறிந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு அமெரிக்க வர்த்தக மந்திரி பரிந்துரைப்பார். ‘ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்தியாவின் இறக்குமதிகள், சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டு, 140 கோடி இந்திய மக்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்பது உட்பட, இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.

error: Content is protected !!