நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் காவல் துறையினர் ஊர் காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
பாராட்டு சான்றிதழ்களும் காவல் துறையினர் சிறப்பாக பணி புரிந்து காவலர்களுக்கு பதக்கங்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.பின்னர் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்று அணிவகுப்பு கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து அரசு மாதிரி பள்ளி மாணவ – மாணவிகள் நடனமும் பல்வேறு பள்ளி மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் சீரமைக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளித்தது.