திருச்சி கிழக்கு. தெகுதி மாநகராட்சி மண்டலம் – 2வார்டு எண் 30-க்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 4 பயனாளிகளுக்கு 1. வருவாய் துறையில் இலவச வீட்டு மனைப் பட்டா 1 நபருக்கு 2. நகராட்சி நிர்வாக துறை சார்பில் 1 நபருக்கு சொத்துவரி பெயர் மாற்றம் 2 நபர்களுக்கு புதிய சொத்து வரி விதிப்பு உத்தரவு
ஆகியவற்றை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்கள். இந்த முகாமில் மண்டலம் 3 -ன் தலைவர் மு. மதிவாணன் மண்டலம் 2 ன் தலைவர் ஜெய நிர்மலா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி கிழக்குத் தாசில்தார் விக்னேஷ் இணை ஆணையர் சாலை தவளவன் சுகாதார அலுவலர்கள் பாலமுருகன் டேவிட் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
