Skip to content

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசினர். மதுரை மாநாட்டில் “ரேம்ப் வாக்” சென்ற விஜயை சந்திக்கும் ஆவலில் சரத்குமார் என்பவர் ரேம்ப் மீது ஏறினார். தன்னை பவுன்சர்கள் தாக்கியதாக, சரத்குமார் பெரம்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!