Skip to content

அரியலூரில் விஜயை வரவேற்று… விதவிதமான பேனர்கள்…தொண்டர்கள் உற்சாகம்..

தமிழ்நாடு சட்டமன்றத்தை விஜய்க்கு பரிசளிக்கும் வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள்…
அண்ணா, MGR படங்களுக்கு நடுவே விஜய்… மூனெழுத்து மந்திரத்தை காலம் ஒலிக்குது என தவெக தலைவர் விஜயை வரவேற்று விதவிதமான பேனர்கள் அமைத்த தொண்டர்கள்…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை நிகழ்த்த உள்ளார். நாளை துவங்கி வருகின்ற டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தனது பிரச்சார பரப்புரையை முன்னெடுக்கிறார் விஜய்.

13-ம் தேதி காலையில் திருச்சி பரப்புரையை முடித்துக் கொண்ட பின்னர் மதியம் அரியலூர் வருகை தந்து பழைய பேருந்து நிலையம் முன்பாக கூடியிருக்கும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

இந்நிலையில் அரியலூர் நகருக்கு வருகை தரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை வரவேற்கும் விதமாக, அவரது தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான டிசைன்களில் பேனர் மற்றும் போஸ்டர்களை வைத்து ஒட்டியுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள புகைப்பட வடிவமைப்புகளும், வசனங்களும் சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததுள்ளது. குறிப்பாக “வாகை சூடும் வரலாறு

திரும்புகிறது” என்ற வாசகத்திற்கு மேலே அண்ணா, MGR இருவரும் கையை உயர்த்தி காட்டியபடி நிற்க, நடுவில் விஜய் தனது இரு கைகளையும் நீட்டி வரவேற்பது போன்ற புகைப்படத்தை அச்சடித்துத்துள்ளனர். அதன் கீழாக, 1967 – 2026 – 1977 என்ற ஆண்டுகளை குறிப்பிட்டு நகர் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மேலும் வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவில் விஜய் நிற்க, அவரிடம் தமிழ்நாடு சட்டமன்றத்தை அனைவரும் தங்கள் கைகளில் ஏந்தி. விஜய்க்கு பரிசளிப்பது போல ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதேபோன்று அரியலூர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ‘அண்ணா-எம்.ஜி.ஆர்’ இவர்களுக்கு நடுவே விஜய் புகைப்படத்தை அமைத்து அதற்கு மேலாக ‘மூனெழுத்து மந்திரத்தை காலம் ஒலிக்குது’ என இடம்பெற்றிருக்கும் வாசகமும் கவனம் பெற்றுள்ளது. மற்றொரு போஸ்டரில் அரியலூர் மண்ணுக்கு வருகை தரும் “பெரியாரின் பேரனே” வருக ! வருக ! என குறிப்பிட்டு நகர் முழுக்க ஒட்டியுள்ளனர்.

மேலும் அரியலூர் நகரின் பிரதான பொதுமக்கள் அதிகம் செல்லும் சாலைகளான, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரம் தேரடி அரியலூர் பேருந்து நிலையம் வரை வைக்கப்பட்டுள்ள பேனர்களில் விதவிதமான அடைமொழிகளை குறிப்பிட்டு தமிழக வெற்றி கழக தொண்டர்கள் பேனர்கள் வைத்துள்ளனர் அவற்றுள் சில அடைமொழிகள்…

இன்றைய இளைஞர்களின் எழுச்சியே..

தமிழக மக்களின் கடைசி நம்பிக்கை…

நாளைய வருங்கால மாண்புமிகு தமிழக முதல்வரே…

உங்க விஜய் நா வரேன்…

எங்கள் தளபதியே…

சோழமண்டலத்திற்கு வருகை தரும் நாளைய முதல்வரே…

2026- தமிழகத்தை ஆளப்போகும் தலைசிறந்த தலைவரே…

எங்கள் உரிமையின் காவலரே…

மக்கள் போற்றும் மாமனிதர்…

நாளைய முதல்வரே…

தேர்தல் களம் அதிர தலைவர் வரார்…

ஏழைகளின் விடிவெள்ளியே ..

சரித்திர தலைவனே, இதய அரசரே.

அண்ணா வரார் வழி விடு…

மக்கள் விரும்பும் முதல்வரே…

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளரே…

நம்பிக்கை நாயகரே…

இன்றைய கட்சித் தலைவர், நாளைய ஆட்சியின் முதல்வர்…

மக்களின் படை தளபதியே…

ஏழைகளின் விடிவெள்ளியே…

எனும் பல அடைமொழிகளுடன் நாளை மதியம் வரவுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை வரவேற்று இன்றே, அக்கட்சி தொண்டர்கள், அரியலூர் நகர சாலையில் அமைத்துள்ள பேனர்கள் பொதுமக்களின் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் 25 நிபந்தனைகளுடன் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி அனுமதி அளித்துள்ளார்.

error: Content is protected !!