அரியலூர் மாவட்டம், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால்வளத்துறை சார்பில் 3746 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரூ.1,18,98,827 மதிப்பிலான கூடுதல் கொள்முதல் விலை தொகையையும் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள், பால் கேன்கள் மற்றும் பால் அளவை கருவிகளையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (18.09.2025) வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி பால் பயன்பாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் மூலம் பல்வேறு முன்னேற்பாடுகள்
மேற்கொள்ளப்படுவதுடன், மாநில அளவில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் 3746 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரூ.1,18,98,827 மதிப்பிலான கூடுதல் கொள்முதல் விலை தொகையையும் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள், பால் கேன்கள் மற்றும் பால் அளவை கருவிகளையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
மேலும், சங்கமானது 2022-2023 ஆம் தணிக்கை ஆண்டில் ரூ.1,76,73,145.89 மொத்தம் இலாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.50,90,530.12 நிகர இலாபம் பெற்றுள்ளது. அதன்படி அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2022-2023ஆம் ஆண்டில் 9519061.9 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.25 வீதம் 3746 உறுப்பினர்களுக்கு ரூ.1,18,98,827.36 மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து வளம்மிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஆண்டிமடத்தில் 10 மற்றும் ஜெயங்கொண்டத்தில் 10 என மொத்தம் 20 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி, எடை இயந்திரம், பால் கேன்கள், மற்றும் பால் அளவை என ரூ.17,48,000 மதிப்பில் உபகரணங்களையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணைப்பதிவாளர் (பால்வளம்)ரெ.நாராயணசாமி, பால்பத அலுவலர்/ பால் சேகரிப்பு குழுத்தலைவர் பி.சுப்பிரமணியன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.