சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது, வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் அலை அலையாக திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறுதி ஊர்வலம் (செப்டம்பர் 19) அன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்கியது.