Skip to content

கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு:-

மயிலாடுதுறையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசுகையில்:- 43 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய 2153 கோடி ரூபாயை தர மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது மத்திய அரசின் அநீதிகளை எதிர்த்து தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்துள்ளோம்.

தமிழக அரசு கடந்த நாலரை வருடத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 46 ஆயிரத்து 167 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அதே வேளையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களுக்கு கல்விக்காக 78 ஆயிரம் கோடிதான் என்றால் கல்வியை நமக்கு கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை.

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த தொகுதியையும் கைப்பற்றி பாஜக அறிதி பெரும்பான்மை கிடைக்காத வகையில் செய்த ஒரே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்பதால் தான் குறுக்கு வழியில் பாஜக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், பாஜக பொறுப்பேற்று பத்தாண்டுகள் நிறைவடைந்தும் தற்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. அடுத்த வருடம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொல்கிறார்கள் அதுவும் எடுப்பார்களா என்று தெரியவில்லை. 1931 இல் இந்தியாவின் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்று சொல்லி பீகாரில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதற்காக பாஜகவுக்குவு எதிராக வாக்களிப்பவர்கள் 64 லட்சம் பேரை ஒரே நாளில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் மத்திய அரசு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பதை செயல்படுத்த முனைவதால் 68,000 வாக்குச்சாவடிகளிலும் திமுக முகவர்களை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரையும் நீக்க விடமாட்டோம் என்பதை எச்சரிக்கும் வகையில் தான் இந்த ஓரணியில் தமிழ்நாடு தீர்மான எதிர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. கீழடியில் இரண்டு முறை ஆய்வு செய்தும் அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதேபோல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில் தான் முதலில் தொடங்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளததை அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பை எதிர்த்து முதலமைச்சரின் பின்னால் தமிழக மக்கள் நிற்க வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியேற்றனர். பின்னர் மாற்றுகட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன்’ கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இதில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மாவட்ட
பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்த கொண்டனர்.

error: Content is protected !!