தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,640-க்கும், 1 சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.159-க்கும், கிலோ வெள்ளி ரூ.1,59,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.11,608-க்கும், ஒரு சவரன் ரூ.92,864-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 25 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,760 உயர்ந்துள்ளது, இது வரலாற்றில் முதல் முறையாக ரூ.85,000-ஐ தாண்டிய நிலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.