சேலம் இரும்பாலை பகுதியில் 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை பகுதியில் 62வயதான ஒருவர் மருத்துவம் பார்த்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த அவர் சந்தேகப்படும் படியாக ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கி வந்துள்ளார். இதனையடுத்து அவர்களை சமூக ஆர்வலர்கள் ஓமலூரில் உள்ள அரசு மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்படி அந்த கிளினிக் வந்து பார்த்தபோது கிளினிக்கில் ஊசி மற்றும் மாத்திரை வழங்கி மருத்துவ பார்த்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவ பார்த்ததாகவும் தெரிந்தது. மேலும் இவர் சகாதேவன் என்பதும் வயது 62 என்பதும் தெரியவந்தது. இவரை உடனடியாக இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.