Skip to content

விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “36 மணி நேரம் கழித்து ஒரு வருத்தமான முகத்துடன் விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் என்னை கைது செய்யுங்கள், தொண்டர்களை விட்டுவிடுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார். அது பொதுமக்கள் இடையே நடிப்பாக பார்க்கப்படுகிறது. அரசியலில் இன்னும் விஜய்க்கு பாலபாடம் கூட தெரியவில்லை. அவருடன் இருப்பவர்கள், அவரை வாழ வைக்க வந்தார்களா இல்லை ஸ்லீப்பர் செல்களா என விஜய்தான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் ஒன்றும் ரசிகர் மன்றத்தை கட்சியாக்கவில்லை. கட்டுப்பாடின்றி, ஒழுக்கமில்லாத தொண்டர்கள் இருந்ததால்தான் கரூரில் இந்த நிலை…

தப்பிப்பதற்காக அரசின் மீது பழிபோடுவது ஒரு விதமான கோழைத்தனம். பிரச்னை நடந்த இடத்தில் இருந்து ஓடிப்போனது கோழைத்தனம். தலைவனுக்கு உண்டான அடிப்படை தகுதியே விஜய்யிடம் இல்லை. கரூர் விவகாரத்தில் தமிழக அரசு தேவையானதை செய்துவிட்டது. Sorry-பா நான் தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க என கேக்குறவன்தான் பெரிய மனுஷன். 25 லட்சம் தரேன் உங்களால 10 வயது குழந்தையை தர முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!