புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் வெறி நாய்கடி, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை, கறம்பக்குடி பகுதியில் வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்து மூன்று பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெறிநாய்க்கடியால் தினசரி பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசிம் கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா பானு (28), நரங்கியப்பட்டு வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த பொன்னுமணி(29), வடக்கு தெரு பகுதியை சேர்ந்த அஹமது ஹமீது(15) ஆகிய மூன்று பேரையும் அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் காயமடைந்த மூன்று பேரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெறிநாய்க்கடியால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதியவர்கள் குழந்தைகள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.