Skip to content

சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இன்று முதல் சென்னை கேடிசிசி மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்யும். அக்டோபர் 15-18 முதல் மழை அதிகரித்து தீவிரம் அதிகரிக்கும்.

கடலில் இருந்து மேகங்கள் கடலுக்குள் கேடிசிசிக்குள் நகர்வது ஒரு அழகான காட்சி. இன்று குறுகிய தீவிர வெடிப்பை அனுபவியுங்கள். சிறிய மேகங்கள் கூட 20-30 மிமீ மழையை உடனடியாகப் பொழியும்.

இன்று முதல் தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்டத்தில் அலுவலகத்திற்கு குடை ரெயின்கோட்டை எடுத்துச் செல்வது அவசியம்” என வானிலை தொடர்பான முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

அவரை போலவே டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “அக்டோபர் 16, 2025 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க நிலை மற்றும் முதல் சுற்று மழைப்பொழிவு (அக்டோபர் 15-21) பற்றிய விரிவான கட்டுரை இன்றைய தினத்தந்தி செய்தித்தாளில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது” என கூறியுள்ளார்.

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!