வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று வீடு கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.