எந்நேரமும் படிக்கச் சொல்லி திட்டிய தாயை தூங்கிக்கொண்டிருக்கும் போது கத்தரிக்கோலால் குத்திவிட்டு நாடகமாடிய 14 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திவிட்டு யாரோ வீட்டுக்குள் புகுந்து குத்திவிட்டு சென்றதாக 14வயது சிறுவன் ஒருவன் நாடகமாடிய நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்ல மதிப்பெண் பெற்றாலும், எல்லா நேரமும் படித்துக்கொண்டே இருக்கச்சொல்லி தாய் அடித்ததால் ஆத்திரத்தில் தாயை கத்தரிக்கோலால் குத்தியதாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.