ஐப்பசி பௌர்ணமி அண்ணாபிஷேக தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தி எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 அடி உயர உள்ள சிவலிங்கம் 8 அடி உயர பார்வதி தேவி சாமேதிரராய் தெய்வங்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது மேலும் பஞ்சமுக ஐஸ்வர்யா சதாசிவ ஹோமம் மற்றும் சிவலிங்கத்திற்கு தீர்த்தம் ஊற்றி பொதுமக்கள் வழிபட்டனர். ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்தி எட்டு 150008 ருத்ராட்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை மெய்சிலிர்த்து பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சேலம் ஸ்ரீ கணேச சிவாச்சாரியார் கூறுகையில் வேத ஆகம விதிப்படி ஒரு லட்சத்து 150008 ருத்ராட்சங்களை கொண்டு சிவலிங்கம் உருவாக்கப்பட்டு உலக மக்கள் அனைவரும்
எவ்விதமான துன்பங்கள் இல்லாமல் சஞ்சல சங்கடங்களை நீக்கிக்கொண்டு தம்பதிகள் நூறாண்டு

காலம் வாழ வேண்டும் பல வேண்டுதல்களை நிறைவேற்றி புண்ணியம் தருகின்ற ருத்ராட்சங்களினால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை முறையாக வடிவமைத்து
எல்லா மக்கள் நலம் பெற வேண்டும் என ஸ்ரீ மகா ருத்ர ஐஸ்வர்ய யாக வேள்வியும் செய்து

பொது மக்கள் அனைவரும் புஷ்பார்ச்சனை, வில்லு அர்ச்சனை செய்தும் தொடர்ந்து மாலை
பிரம்ம சாபம் பெற்ற நோய்கள் நீங்கி அதிலிருந்து விடுபட்டு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சிவபெருமானுக்கு அண்ணாபிஷேகம், சங்கு அபிஷேகம் நடைபெறும் பாரத தேச மக்கள் அனைவரும் எல்லா நலமும் பெற எல்லா நிலைகளிலும் உயர வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார் .

